எம்.ஏ.தாஜகான்-
பொத்துவில் அல்-இர்பான் மகளிர் கல்லூரியில் சென்ற வருடத்தில் க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களுக்காக ஆசிரியர்கள் மாலை நேரங்களில் கட்டணம் எதுவுமின்றி வகுப்புக்கள் நடாத்தியமையின் விளைவாக இம்முறை சிறந்த பெறுபேறுகள் வரக் காரணமாக அமைந்துள்ளதாக அல்- இர்பான் மகளிர் கலலூரியின் அதிபர் ஏ.எல். கமறுதீன் தெரிவித்தார்.
பொத்துவில் பிரதேசத்தின் முன்னணிப் பெண்கள் பாடசாலையான அல்இர்பான் மகளிர் கல்லூரியின் க.பொ.த.சாதாரண தரப் பெறுபேறு சம்பந்தமாக கருத்து தெரிவிக்கின்ற பொழுதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
இவ்வருடத்தில் எமது பாடசாலையின் க.பொ.த சாதாரணதரப் பெறுபேறுகளின் சித்தி வீதம் 92 வீதமாகும். கடந்த வருடத்தை விட உயர்வான நிலையில் காணப்படுவது குறித்துக்காட்டப்பட வேண்டியதொன்றாகும். இதற்கு பிரதான காரணம் மாலை நேரங்களில் எமது ஆசிரியர்கள் கற்பித்தலில் பெரும் பங்காற்றியமையாகும்.
அந்த வகையில் பின்வரும் மாணவர்கள்:
# எம்.எஸ்.பாத்திமா பினாரா- 8ஏ 1சி,
# எம்.எம்.பாத்திமா அப்ரிஜா- 7ஏ 1பீ 1சி,
# எம்.எச்.பாத்திமா றினோஸா-7ஏ 1பி 1சி,
# ஜே.எஸ்.மஸ்வுதா ஹஸ்மத்- 7ஏ 1பி 1எஸ்,
# எப். பாத்திமா சஸ்னா-6ஏ 2பி 1சி,
# ஜே.சித்தி சுமையா-6ஏ 2பீ 1எஸ்,
# வை.மெஹ்னாஸ்- 5ஏ 4பி,
# எஸ்.சிபா-5ஏ 3பி 1சி
பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
76 பேர் பரிட்சைக்குத் தோற்றி 70 பேர் உயர்தரம் படிப்பதற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
அந்தவகையில் இஸ்லாம் பாடத்தில் 77 பேரில் 57ஏ,11பீ,5சி,4எஸ் தரத்துடன் மாணவர்கள் 100 வீத சித்தியும், தமிழ் மொழியும் இலக்கியமும் 77பேரில் 19ஏ,24பீ,24சீ,8எஸ் தரத்துடன் 100 வீத சித்தியும்,தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தில் 16 பேரில் 2ஏ,4பி,5சி,5எஸ் தரத்துடன் 100 வீத சித்தியும், கணிதத்தில்77 வீதமும், விஞ்ஞானத்தில் 86 வீதமும், வரலாறு 90 வீதமும், ஆங்கிலம் 50 வீதமும், குடியுரிமைக்கல்வி 96 வீதமும், வணிகக் கல்வியில் 97 வீதமும், இலக்கிய நயம் 77 வீதமும், சித்திரம்100 வீதமும்,சுகாதாரம் 98 வீதமும் சித்தியடைந்துள்ளார்கள்.
