காரைதீவு பிறீமியர் லீக்-2015 இற்கான ஒவ்வொரு அணிகளுக்குமான வீரர்களை அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் திரு. M. சுந்தரராஜன் (அதிபர்/Senior Executive Coordinator-KPL) அவர்களின் நெறிப்படுத்தலின் திரு. C. நந்தகுமார் (திட்ட இணைப்பாளர், Consultant-KPL) , Dr.M.A. பிரசாத் (Chairman-KPL ) Eng.K.சசிகுமார் மற்றும் நிபுணத்துவ ஆலோசகர்கள், அணிகளின் பிரதிநிதிகள் அடங்கலான குழுவினரின் முன்னிலையில் இவ்வேல நிகழ்வு மிகவும் சுவாரசியமாகவும், நட்புறவுடனும் நடைபெற்ற இவ் ஏல நிகழ்வில் வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டனர்.
கிழக்கிலங்கையின் காரைதீவின் இணைய நுழைவாயிலான www.karaitivu.org ஆனது இணையதளமானது காரைதீவின் விளையாட்டு துறையினை ஊக்குவிக்குமுகமாகவும், காரைதீவு விளையாட்டு துறையின் மற்றுமொரு அத்தியாயமாகவும், எமது கிராம வீரர்களை உள்ளடக்கியதாக காரைதீவு பிறிமியர் லீக் (Karaitivu Premier League) எனும் மென்பந்து கிரிகட் சுற்றுப்போட்டியினை முதன் முதலாக 2014 ல் அறிமுகம் செய்து வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
காரைதீவு பிரீமியர் லீக் ஆனது காரைதீவில் எல்லோராலும் விரும்பி பார்க்கப்படும் ஒரு கிரிக்கெட் சுற்றுப்போட்டாயாம். இப் போட்டியனது புகழ்பெற்ற காரைதீவின் கிரிக்கெட் வீரர்கள், ஒரு மேடையில் ஓற்றுமையாக விளையாடுவதற்று வழிவகை செய்வதற்காக காரைதீவு.ஓர் ஆல் வடிவமைக்கப்பட்டது.