கோல்ட்ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு!

அபு அலா -
ட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் சோபர் விளையாட்டுக் கழகத்தின் உப தலைவருமாகிய ஏ.எஸ்.எம்.உவைஸின் தனிப்பட்ட நிதியிலிருந்து மீனோடைக்கட்டு கோல்ட் ஸ்டார் விளையாட்டுக்கழக வீரர்களுக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை (23) இடம்பெற்றது.

கோல் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.ஏ.நபீஸ் தலைமையில் மீனோடைக்கட்டு கரப்பந்து விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் சோபர் விளையாட்டுக்கழகத்தின் உப தலைவருமாகிய ஏ.எஸ்.எம்.உவைஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

கிரிக்கெட் விளையாட்டு உகரணங்களை அதன் விளையாட்டுக் குழுத் தலைவரிடமும் கரப்பந்து விளையாட்டு உபகரணங்களை அதன் செயலாளரிடமும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கோல் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.(ந-த்)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -