உதயசிறி விடுதலை- AUDIO

ஒலிப்பதிவு: ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-

சிகிரியா சுவரோவியத்தில் கையெழுத்திட்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி எனும் யுவதி இன்று வியாழக்கிழமை காலை எட்டு மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

அண்மையில் இரண்டு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உதயசிறிக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியன்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார்.

எனினும், உதயசிறியை உடனடியாக விடுதலை செய்வதற்கு அவர் சார்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று புதன்கிழமை வரை அவரது விடுதலைக்கு தடையாக இருந்து வந்தது.

இந்நிலையில் உதயசிறி, சார்பில் வழக்குத் தொடர்ந்த நல்லாட்சிக்கான மனித உரிமைகள் இயக்கமும், மனித உரிமைகள் இல்லமும் கண்டி மேல் நீதிமன்றத்தில் வைத்து நேற்று புதன்கிழமை வழக்கை விலக்கிக்கொண்டதை அடுத்து உதயசிறியை உடனடியாக விடுவிப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


இந்த அறிவித்தல் நேற்று புதன்கிழமை மாலையளவிலேயே தமக்குக் கிடைக்கப் பெற்றதால் உதயசிறியை இன்று வியாழக்கிழமை அழைத்துவரப் போவதாக உதயசிறியின் உறவினர்கள், சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர். அதன் பிரகாரம் உதயசிறி சரியாக இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ளார்.sa

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -