உங்கள் செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் கவலைவேண்டாம் கத்துங்கள்... சார்ஜாகிவிடும்

ங்கள் செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சாதனத்தை போனில் பொறுத்திவிட்டு அதை பார்த்து கத்தினால் சார்ஜ் ஏறிவிடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களின் மிகப்பெரிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் தீர்ந்து போவதுதான். இதை சமாளிப்பதற்கு பலர் இரண்டு போன்களை கையில் வைத்துக்கொண்டு அலைகிறார்கள். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு உலகம் முழுவதும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

அதன் விளைவாக ஜார்ஜியா தொழில்நுட்ப பல்லைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஸ்டாம் அளவில் இருக்கும் காகித ஒலிவாங்கியை தயாரித்துள்ளார்கள். போனில் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த ஒலிவாங்கியை நோக்கி சத்தமாக கத்தும் போது காகிதத்தில் அதிர்வு ஏற்பட்டு அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் ஆற்றலை கொண்டு செல்போனை சார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆனால் இந்த குறைந்த அளவிளான மின் ஆற்றலை கொண்டு முழு பேட்டரியையும் சார்ஜ் செய்ய முடியாது.

உற்பத்தி செய்யப்படும் மின் ஆற்றலின் அளவானது ஒலிவாங்கியின் அளவை பொறுத்து மாறுப்படும். தற்போது ஒரு சதுர மீட்டருக்கு 121 மில்லிவாட்ஸில் உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையில்லாமல் அதிக சத்தம் ஏற்படும் இடங்களில் இந்த வகையான ஒலிவாங்கியை வைத்து மின் உற்பத்தியிலும் ஈடுபடமுடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.maalaimalar
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -