கே.எல்.முஹம்மத் நஜாத்-
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் எடுக்கப்பட்ட படம் இது. எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தையை தன்னுடைய பைக் பில்லியனில் கட்டி வைத்து சாலையில் இழுத்துச் சென்று கொண்டிருந்தார் இந்த மனிதர்.
பார்த்ததுமே பதறிப் போனவர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்லியிருக் கிறார்கள்.
காவல் விசாரணையில் கிடைத்த தகவல்தான் ட்விஸ்ட்.
அந்த குழந்தை, அவருடைய சொந்த மகள். செக்யூரிட்டி கார்டாக பணியாற்றும் அவர், பரீட்சை எழுத அடம்பிடித்து மறுத்த மகளை இப்படி கட்டி வைத்து பள்ளிக்கு இழுத்துச் சென்றதாக வாக்கு மூலம் கொடுத்தார்.
இப்படி என் குழந்தையைக் கட்டி வைத்து அழைத்துச் செல்வதால் அவள் செத்துவிட மாட்டாள். ஆனால், கல்வி கற்காவிட்டால் அவளுக்கு எதிர் காலமே இருக்காது....! என்று அந்த மனிதர் சொன்னபோது விசாரித்த காவல்துறையினருக்கே கண்கள் கலங்கியிருக்கிறது.
இந்த வழக்கை எப்படி நடத்துவது என்று தெரியாமல், சிறிய வழக்காகப் பதிவு செய்து இனிமேல் இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள்.
இந்த செய்தியை என்னவென்று விளங்கிக் கொள்வது?
