பிரதேச வாத உணர்வுகளை தூண்டி பிரித்து வைத்து செயற்பட்டு வந்த முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள்!

சலீம் றமீஸ்-
தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இனவாத, பிரதேச வாத உணர்வுகளை தூண்டி தேசிய காங்கிரஸ் ஒரு போதும் மக்கள் மத்தியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லைதேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் உதுமாலெப்பை தேர்தல் காலங்களில் நமது மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் மத்தியில் இனவாத, பிரதேச வாத உணர்வுகளை தூண்டி ஒரு போதும் தேசிய காங்கிரஸ் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை என பொத்துவில் - பாக்கியாவத்தை கிராமத்தில் தேசிய காங்கிரஸின் கிளை புனரமைப்புக் கூட்டம் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை (MPC) குறிப்பிட்டார். 

மேலும் உரையாற்றுகையில்; 

மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் அதிகாரத்தை பெரும் கட்சிகள் நமது மக்களுக்காக உயர்ந்த எண்ணங்களை எண்ணி நல்ல திட்டங்களை உருவாக்கி அத்திட்டத்தின் ஊடாக நமது மக்கள் நீண்ட காலம் நன்மை பெறக் கூடிய வகையில் பணி புரிய வேண்டும். தேர்தல் காலங்களில் மாத்திரம் வருகை தந்து இனவாத, பிரதேச வாத உணர்வுகளை கூறுகின்ற முஸ்லிம் காங்கிரஸூக்கு வாக்களித்து விட்டு, தேர்தல் முடிந்ததும் அந்தக் கட்சியைப் பற்றி விமர்சனம் செய்கின்ற நிலமைக்கு நமது அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் இசைவாக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலைமையில் இருந்து நமது அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் இப்போது படிப்படியாக மீண்டு வருகின்ற நிலமை உருவாகி வருவதனை அவதானிக்கும் சில அரசியல் வாதிகள் பொத்துவில் பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து எதிர்கால பொத்துவில் பிரதேச அரசியல் அதிகாரம் தொடர்பாக சிந்தித்து செயற்படுவதற்கு எதிராக இளைஞர்களை பயமுறுத்தி வருகின்ற நிகழ்வுகள் பொத்துவில் பிரதேசத்தில் நிகழ்ந்து வருகின்றது. என்பதனை அறிந்து நாம் மிகவும் கவலைப்பட வேண்டியுள்ளது.

பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கும், மாகாண சபைக்கும் பிரதிநிதிகள் பெறுவது தொடர்பாக இளைஞர்கள் குரல் கொடுப்பதைக்கூட அங்கீகரிக்க முடியாத நிலைமை சில அரசியல் வாதிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. நமது மக்களை தொடர்ச்சியாக ஏமாற்ற முடியாது நமது மக்கள் யதார்த்தங்களை உணர்ந்து ஒற்றுமைப்பட்டு செயல்படும் போது நமது மக்களை ஏமாற்றுபவர்களை மக்களே ஓரம் கட்டும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பதனை இளைஞர்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் உணர்ந்து கொள்வார்கள்.

பொத்துவில் பிரதேசத்தில் தேசிய காங்கிரஸ் வளர்ந்து விடக் கூடாது என முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் சில காலம் பொத்துவில் பிரதேச மக்களையும், தேசிய காங்கிரஸையும் பிரதேச வாத உணர்வுகளை தூண்டி பிரித்து வைத்து செயற்பட்டனர். இதனால் பொத்துவில் மக்களுக்கு செய்ய வேண்டிய பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு செய்ய சந்தர்ப்பம் இருந்தும் சிலரின் சுயநல அரசியல் நடவடிக்கைகளினால் அவைகள் தடைப்பட்டன. இது பொத்துவில் பிரதேச மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநியாயமாகும். சில காலங்களுக்குப் பின் தேசிய காங்கிரஸ் கட்சியையும், அதன் தலைமையையும் பொத்துவில் பிரதேச மக்கள் நேசித்தனர். அதனால்தான் இன்று நமது பொத்துவில் பிரதேசம் அபிவிருத்தியில் பாரிய வளர்ச்சி அடைந்துள்ளதை நமது மக்கள் யதார்த்தமாக உணர்ந்து கொள்ளும் நிலமை உருவாகி உள்ளது.

தேசிய காங்கிரஸின் சார்பில் மத்திய அரசாங்க அமைச்சரவையில் யாரும் அமைச்சர் பதவிகள் இல்லாத நிலையிலும், கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் யாரும் அமைச்சர் பதவியில் இல்லாத நிலையிலும் மக்கள் தேசிய காங்கிரஸின் கொள்கையில் ஒற்றுமைப்பட்டு வருவது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். உண்மைக்குண்மையாக தேசிய காங்கிரஸினை நேசிக்கும் மக்கள் கூட்டத்தை நாம் தற்போது அடையாளம் கண்டு வருகின்றோம்.

தேசிய காங்கிரஸின் சிந்தனைகளையும், கருத்துக்களையும் மக்கள் காலடிக்கு கிராம சேவகர் பிரிவு தோறும் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் கடந்த இரண்டு மாத காலமாக பொத்துவில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந் நிகழ்வுகளில் மக்கள் காட்டும் ஆதரவு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகின்றன எனக் குறிப்பிட்டார்.

தேசிய காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளர் யு.எல்.உவைஸ், பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் அமைப்பாளர் ஏ.பதுர்கான் (பிரதேச சபை உறுப்பினர்), கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எல்.ஏ.காதர் (Rtd.DEO), கிராம சேவகர் பிரிவுகளுக்கான அமைப்பாளர்கள், கொள்கை பரப்புச் செயலாளர்கள், இளைஞர் அமைப்பாளர்கள், மகளிர் அமைப்பாளர்கள், பொத்துவில் பிரதேச தேசிய காங்கிரஸின் ஆலோசனை சபையின் உறுப்பினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.(ந-த்)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -