கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு!

 கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் புதிய நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று (05) தெரிவு செய்யப்பட்டனர். 

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்ற பெயரில் இயங்கி வந்த ஊடகவியலாளர் அமைப்பு, கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனம் என மறு சீரமைக்கப்பட்டு, இன்று அதன் பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்ற போதே, இதற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். 

மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தின் போது, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். இதன் தலைவராக தேவ அதிரன், செயலாளராக ரி.எல்.ஜௌபர்கான், பொருளாளராக சிவம் பாக்கியநாதன், உப தலைவர்களாக எம்.சகாப்தீன், எம்.எஸ்.எம்.நூர்தீன், உப செயலாளர்களான எஸ்.பேரின்பராசா, எஸ்.வரதராஜ், ஊடக இணைப்பாளர்களாக எஸ்.எச்.எம்.சர்மிளா, எஸ்.நிலாந்தன் உட்பட நிருவாக குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். 

கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கியதாக செயற்படவுள்ள இந்த அமைப்பில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஊடகவியலாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -