பத்தொன்பதாவது திருத்தத்திற்கு அச்சுறுத்தி ஆதரவு பெற முடியாது - ஹெல உறுமய

த்தொன்பதாவது திருத்தத்திற்கு அச்சுறுத்தி ஆதரவு பெற முடியாது அதற்கு கட்டுப்படவும் மாட்டோம். என தெரிவிக்கும் அரசின் பங்காளிக்கட்சியான ஜாதிக ஹெல உறுமய தினேஷுக்கோ, சம்பந்தனுக்கோ, அல்லது ஜே.வி.பி.க்கோ எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவதை கடுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தது.

இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க மேலும் தெரிவிக்கையில்.

19ஆவது திருத்தத்தை முழுமையாக எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நாம் முன்வைத்த திருத்தங்களுடன் அது பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவேண்டும். இல்லாவிட்டால் அதனை எதிர்ப்போம் தோல்வியடையச் செய்வோம்.எனவே பாராளுமன்றத்தை கலைப்பதாக எம்மை அச்சுறுத்த முடியாது. அதற்கு ஒரு போதும் அடிபணியமாட்டோம்.

எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டும். தற்போது ஆட்சியில் இருப்பது கூட்டு அரசாங்கம்.

எனவே அரசின் பிழைகளை தட்டிக்கேட் கவும் அதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் தேவை. அப் பதவிக்கு ஐக்கி மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து ஒருவரே நியமிக்கப்பட வேண்டும்.

தினேஷுக்கோ, சம்பந்தனுக்கோ, அல்லது ஜே.வி.பிக்கோ எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவதை கடுமையாக எதிர்க்கின் றோம்.இவர்கள் வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதேவேளை ஜே.வி.பி தமது சொந்தக் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றம் வரவில்லையென்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -