ஜுனைட்.எம்.பஹ்த்-
கொழும்பில் உள்ள உணவகங்களில் 'கொத்து ரொட்டி' உணவை வாங்கும் போது அதன் தரம் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் தலைமை சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இவ் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கொத்து ரொட்டி தயாரிப்பு செயன் முறையில் 4 பேர் வரை ஈடுபடுவதால் இது ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கக் கூடியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே கொத்து ரொட்டியை உணவாக உட்கொள்வோர் அது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும், சுகாதாரமான முறையில் தயாரிக்கும் கொத்து ரொட்டியை மாத்திரம் உண்ணும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக கொழும்பில் உள்ள உணவகங்களில் தயாரிக்கப்படும் கொத்து ரொட்டி உணவு தொடர்பில் அதிக அக்கறையாக இருக்கும்படி ருவன் விஜயமுனி எச்சரித்துள்ளார்.
இலங்கை வாசிகளின், குறிப்பாக கொழும்பில் வாழும் பலரின் பிரதான இரவு உணவாக கொத்து ரொட்டி காணப்படுகின்றது. மேலும் கொழும்பின் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கக் கூடிய உணவாக கொத்து ரொட்டி உள்ளது. ஆகையால் இது தொடர்பில் அவதானமாக இருக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.