பொன் செல்வராசா பயணித்த வேன் - மட்டக்களப்பு கல்லடியில் விபத்து!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
மிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா பயணித்த வேன் இன்று 1 புதன்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கல்லடியில் விபத்துக்குள்ளானது.

குறித்த வேன் மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த வேளை முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலே இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக அப்பகுதியில் நின்ற பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்து மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது.

மேற்படி விபத்தில் தனக்கும் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் எவ்வித காயமும் ஏற்பட வில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்துக்குள்ளான நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் ஸ்தலத்திற்கு வருகைதந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவினர் விபத்து குறித்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்துக்குள்ளான வேனில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசாவும் அவரது பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் மூவரும் சாரதியும் பயணித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான வேனும் ,மோட்டார் சைக்கிளும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -