எம்.ஐ.எம்.றியாஸ்,எம்.வை.அமீர்-
அம்பாறை,பொத்துவில்,இறத்தல்,பள்ளியடிவட்டையின் பிரதான பாச்சலுக்குரிய வாய்க்கால் 1981 ஆம் ஆண்டு முதல் சேதமடைந்துள்ளதால் இம்முறை சிறுபோக விவசாய நடவடிக்கைகளுக்காக அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் கவனிப்பாரற்றுள்ள இவ்வாய்க்காலை புனரமைத்து வழங்குமாறு பள்ளியடிவட்டை விவசாய அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 34 வருடங்களாக அரசாங்கங்களின் எந்த விதமான உதவிகளுமின்றி இவ்வாய்க்கால் தேசதமடைந்து வருகின்ற போது விவசாயிகளின் சொந்தப்பணங்களைக் கொண்டு முடிந்தளவு தற்காலிகமாக புனர்தானம் செய்து கொண்டு வருகின்றோம்.விவசாய அமைப்பினர் பிரதான வாய்க்காலை மிகக் கஸ்டப்பட்டு மண்மூடை அமைத்து தண்ணீரை தேக்கி வயல் நிலங்களுக்கு பாய்ச்சுகின்றனர்.
லகுகல பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட இவ் வாய்க்காலை புனரமைத்து வழங்குமிடத்து சுமார் 200 ஏக்கர் வயல் நிலங்களில் இரு போகங்கள் தடையின்றி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என இதன் போது விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது விடயமாக,பள்ளியடிவட்டை விவசாய அமைப்பின் ஆலோசகர் என்.றிஸ்வி மேற் கொண்ட முயற்சியின் விளைவாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எல்.தவம் பள்ளியடிவட்டை வயல் பிரதேசத்திற்கு சென்று பிரதான வாய்கால் மற்றும் அதனோடு இணைந்த குளத்தினையும் பார்வையிட்டு,விவசாய அமைப்பினரிடம் உடனடியாக இதற்கான மதிப்பீட்டு அறிக்கையினை தருமாறும் அவரது நிதி ஒதுக்கீட்டின் மூலமும்,கிழக்கு மாகாண நீர்ப்பாசனம் மற்றும் விவசாய அமைச்சுக்களின் மூலமாகவும் நிதிகளைப் பெற்றும் விரைவாக உடைப்பெடுத்துள்ள இக் குளம் மற்றும் பிரதான வாய்க்காலை புனரமைத்து வழங்குவதாக மாகாண சபை உறுப்பினர் தவம் இதன் போது விவசாயிகள் மத்தியில் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பள்ளியடிவட்டை விவசாய அமைப்பின் தலைவர் கே.எம்.காசீம்,இப்பிரிவு கிராம உத்தியோகத்தர் குலேநாயகம் உட்பட உத்தியோகத்தர்கள்,விவசாயிகள்,பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
மிக விரைவில் இக் குளம் உட்பட வாய்க்கால் புனரமைத்து வழங்க வேண்டியது இப்பிரதேச அரசியல் பிரமுகர்களின் கடமையாகும் என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
.jpg)
.jpg)
.jpg)