தனது மகளை வயிற்றில் கட்டி கொண்டு சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்ற கேப்டன் தோனி!

சொந்த ஊரான ராஞ்சிக்கு இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர் கேப்டன் தோனி தனது மகளை வயிற்றில் கட்டி கொண்டு வந்திருந்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

 கேப்டன் தோனி கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி தனது நீண்ட நாள் தோழியான சாக்‌ஷியை மணந்தார். கேப்டன் தோனியின் மனைவி சாக்‌ஷிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜீவா என்று பெயரிடப்பட்டது. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த தோனி தனது மகளை கூட பார்க்காமல் இருந்தார்.

இந்த நிலையில் டெல்லியில் சுரேஷ் ரெய்னாவின் திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோனி நேற்று தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் ராஞ்சி விமான நிலையத்திற்கு வந்தார். தனது குழந்தையை கங்காரு போல வயிற்றில் பை கட்டி சுமந்து சென்றார். அங்கிருந்தவர்கள் அனைவரும் தோனியை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -