அமெரிக்காவில் சுதந்திரதேவி சிலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் லிபர்டி தீவில் சுதந்திரதேவி சிலை உள்ளது. அது 151 அடி (93 மீட்டர்) உயரம் கொண்டது. சுற்றுலா தளமாக விளங்கும் இந்த சிலையை பார்வையிட தினசரி ஏராளமானவர்கள் சென்று வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர் சுதந்திரதேவி சிலையில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். நியூயார்க் பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனையிட்டனர். 

பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு இருக்கிறதா? என மோப்பம் பிடித்தன. 

வெடிகுண்டு மிரட்டல் வந்த போது சுதந்திரதேவி சிலையை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். 

கடுமையான சோதனைகளுக்கு பிறகு அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மீண்டும் சுதந்திரதேவி சிலைக்கு செல்ல பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.(ந-த்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -