பழுலுல்லாஹ் பர்ஹான்-
காத்தான்குடி அல்-மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நிமியமிக்கப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலியை வரவேற்கும் நிகழ்வு 23-04-2015 அன்று வியாழக்கிழமை அல்-மனார் நிறுவனத்தின் அர்ராஷித் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அல்-மனார் நிறுவனத்தின் நிருவாகப் பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற இவ் வரவேற்பு நிகழ்வில் முதன்மை அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி கலந்து கொண்டதோடு விஷேட அதிதியாக அல்-மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி) கலந்து கொண்டார்.
இதன் போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் புதிய வலயக் கல்விப் பணிப்பாளராக நிமியமிக்கப்பட்டுள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.சேகு அலி அதிதிகளினால் பொன்னாடை போர்த்தப்பட்டு ,பரிசும் ,நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இங்கு காத்தான்குடி பிரதேசத்தில் கல்வித் துறைக்கு சேவையாற்றிய முன்னாள் காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் சுபைர்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் இஸ்மாலெவ்வை,காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் பதுர்தீன் ஆகியோரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தப்பட்டு ,பரிசும் ,நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் சிறப்புரையை காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி எம்.எச்.எம்.புகாரி (பலாஹி) நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி அப்துல் காதர் (பலாஹி), ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி) உட்பட கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், கல்வியலாளர்கள், அல் மனார் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ,ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.(ந-த்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)