ந.நவோஜ்-
மஹிந்த ராஜபக்ச அரசுடன் இணைந்து ஊழல் புரிந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் பற்றிய பட்டியலை விரைவில் வெளியிடப் போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களுக்கிடையிலான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நாட்டிலுள்ள சிறுபான்மை இனங்களை இல்லாதொழிக்கும் செயற்பாட்டினையே முன்னெடுத்து வந்தது. இந்த அரசுடன் இணைந்து ஊழல் புரிந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்றார்கள் அவர்கள் பற்றிய பட்டியலையும் விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார்.
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய கட்சியாக இந்த வடக்கு கிழக்கு பகுதியிலே திகழ்கின்றது. இந்த இலங்கையின் அரசியல் வரலாற்றில் சோரம் போகாமல் தனது இனத்திற்காகக் குரல் கொடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு கட்சியாக உள்ளது.
இலங்கையில் இரண்டு கட்சிகள் தான் தனது கொள்கையில் கவனமாக இருக்கின்றதன. ஒன்று மக்கள் விடுதலை முன்னனி அடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
கடந்த கால அரசாங்கம் சகல கட்சிகளையும் உடைத்தது அனைவருக்கும் தெரியும் ஆனால் அது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினையும் உடைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டு தோல்வி கண்டது.
ஆனாலும் ஒரு சிங்கள வம்சாவழியாக வந்த ஒருவரை மாத்திரம் அவர்கள் பக்கம் இழுக்க முடிந்தது. ஆனால் நாங்கள் மிகவும் அவதானமாக இருந்தோம் கடந்த அரசாங்கத்தின் அடாவடித் தனங்களுக்கு மத்தியில் எங்கள் மக்களின் தேவைகளுக்காக நாங்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம்.
இந்த நிலையில் நாம் ஒருபோதும் அரச தரப்பினை பெருவாரியாக ஆதரித்தது கிடையாது. ஆனால் ஒரு காலத்தில் தமிழ் அரசுக் கட்சி ஆதரித்து அமைச்சுப் பதவியைப் பெற்று எமது மக்களுக்கு அதனால் சேவை செய்ய முடியாது என்று அறிந்து அதனைத் துறந்த வரலாறும் உண்டு. அதன் பின்னர் எந்தவொரு அரசாங்கத்தினையும் ஆதரித்தது இல்லை.
ஆனால் மஹிந்த அரசாங்கத்தின் அடாவடித்தனமும் ஊழலையும் எதிர்த்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதனால் ஒரு ஆட்சி மாற்றத்திற்காக ஆதரித்தோம். அதற்காக ஐக்கிய தேசியக் கட்சி நல்லதைச் செய்யும் என்று எதிர்பார்த்து வரவில்லை.
கடந்த ஆட்சியை மாற்ற வேண்டும் கடந்த காலங்களில் இந்த நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்த சிங்கள இனத்தின் சக்தியாகத் திகழ்ந்த ஐக்கிய தேசியக் கட்சியாலும்இ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாலும் அவற்றோடு இணைந்த கட்சிகளாலும் ஏமாற்றப்பட்டவர்கள்.
இவ்வாறு இருக்கையில் தமிழ் இனத்திற்கு கடும் துரோகம் விளைவித்த ஆட்சியாளரை மாற்றுவதற்காக நாம் கடந்த தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால அவர்களுக்கு ஆதரவை வழங்கினோம். அதற்கு எமது மக்களின் பாரிய பங்களிப்பும் கிடைத்தது.
ஆட்சி மாறி அமைந்தது என்ற காரணத்தினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கக் கட்சி என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது. நாங்கள் இந்த அரசாங்கத்தின் நல்ல செயற்பாடுகளுக்கு கூடவே இருப்போம்.
ஏன் இத்தனை காலமும் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினையை இவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் தான் இவ் ஆதரவினை நாம் வழங்குகின்றோம்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் கூட நியாயமான முறையில் தங்கள் நூறு நாள் திட்டத்திற்குள்ளும் எம் இனம் சார்ந்த முக்கியமான விடயங்களை நிறைவேற்றவில்லை. குறிப்பாக எங்கள் இளைஞர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றார்கள். அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.
நாம் எதிர்பார்த்தோம் கடந்த சுதந்திர தின விழாவில் தமிழ் பேசும் மக்களால் வாக்களித்து வந்த அரசாங்கம் சிறிதளவு அரசியற் கைதிகளையாவது விடுவிப்பார்கள் என்று ஆனால் அது இடம்பெறவில்லை.
மேலும் கிழக்கு மாகாண சபையில் நியாயமான முறையில் எமக்கு முதலமைச்சுப் பதவியைத் தருவார்கள் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால் அவர்கள் அந்த விடயத்திலும் எமக்கு கைகொடுக்கவில்லை.
தற்போது இந்த நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சிஇ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து ஒரு தேசிய அரசாங்கத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இதில் பாராளுமன்றத்தில் முதலாவது அதிகப்படியான வாக்குகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்இ இரண்டாவது ஐக்கிய தேசியக் கட்சியும்இ அடுத்த படியான வாக்குகளைப் பெற்ற கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் திகழ்கின்றது.
இந்நிலையில் முதல் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்ததால் எதிர்கட்சித் தலைவர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தோம். அது தொடர்பாகவும் நடவடிக்கையை மேற்கொண்டோம். அதிலும் எமக்கு சார்பான விடயங்கள் இடம்பெறவில்லை.
நாங்கள் எவ்வளவு எல்லாம் கஷ்டப்பட்டு இந்நிலைக்கு வந்தோம் அதை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக மஹிந்தவின் பிரதிநிதிகளாக இருக்கின்ற அரசியல் பிரதிநிதிகள் தீவிரமாக இருக்கின்றார்கள்.
திடீரென கொண்டு வந்தார்கள் தேசிய கீதம் தமிழில் பாடக் கூடாது சிங்களத்தில் மாத்திரம் தான் பாட வேண்டும் என்று. ஆனால் ஜனாதிபதி அவர்கள் அது தமிழிலும் பாடலாம் என்று தெரிவித்துவிட்டார்.
மீண்டும் சிங்கள இனத்தை மாத்திரம் பிரதிபலிக்கும் நிறக் கொடியை ஏந்தி இந்த நாட்டில் சிங்களவர்களைத் தவிர ஏனையவர்கள் இல்லை என்பதை பிரதிபலிக்கும் வகையில் ஏனைய இனங்களின் நிறங்களை இல்லாது செய்துஇ ஒரு கொடியைத் தயார் செய்து முன்னாள் பாதுகாப்பு செயலாளரின் ஊழலுக்கு எதிரான விசாரணையின் போது அதனைப் பாவித்தார்கள்.
நியாயப்படி பார்த்தால் இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றவர்கள் என்ற ரீதியில் இந்த அரசாங்கம் அவர்களைக் கைது செய்திருக்க வேண்டும். தேசியக் கொடியை அவமதித்து இந்த நாட்டின் தேசிய இனங்கள் இரண்டின் அடையாளங்களை மறைத்திருக்கின்றார்கள் என்ற வகையில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் ஆனால் அவர்கள் மௌனம் சாதிக்கின்றார்கள்.
அன்றைய மகிந்த அரசாங்கம் இந்த நாட்டில் இருக்கும் மற்றைய தேசிய இனங்கள் இரண்டையும் இல்லாதொழிக்கும் செயற்பாட்டினையே செய்து வந்தது. அவ்வாறான மஹிந்தவின் அரசாங்கத்தை அவர்கள் அக்காலத்தில் செய்த ஊழல்களுக்கெல்லாம் விரைவில் தண்டனை கிடைக்கும்.
எங்கள் மாவட்டத்திலும் ஊழல் மிக்கவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள் பற்றிய பட்டியலையும் வைத்திருக்கின்றேன் விரைவில் வெளியிடுவேன். அவர்களையும் கைது செய்வதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் நிலை பாராளுமன்றத்தில் பூரணமான ஒரு முடிவை எடுக்க முடியாத ஒரு நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு காலமும் இல்லாமல் பாராளுமன்றத்தில் இரவில் நித்திரை செய்திருக்கின்றார்கள்.
பாராளுமன்றத்திற்கென உருவாக்கப்பட்ட உடையை விட்டு வேறொரு உடையில் சென்று அங்கு நித்திரை கொள்ளுகின்றார்கள் எவ்வளவு கீழ்த்தரமான செயல். இவ்வாறு கீழ்த்தரமானவர்கள் தான் அந்த மஹிந்தவின் ஆட்சியில் இருந்திருக்கின்றார்கள் என்பதனை இப்போது மக்கள் புரிந்திருப்பார்கள்.
இனியாவது இதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று ஆட்சியில் ஐக்கிய தேசியக் கட்சிதான் இருக்கின்றது என்று எமது மண்ணில் திரும்பவும் தங்கள் செயற்திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சியோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ எமக்கு நியாயத்தை வழங்கும் என்று சொல்ல முடியாது. நியாயத்திற்காக நாம் தான் போராட வேண்டும்.
ஏனெனில் நாம் ஏமாற்றப்பட்ட சமுகம். இன்னும் எம்மை ஏமாற்றத்தான் போகின்றார்கள். ஆனால் நாம் அதற்கு இடம்கொடுக்காத வகையில் சாணக்கியமான முறையில் எமது தலைவர் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்து எமது அபிலாசைகளை பெறுவதற்கு நாம் எதற்காக போராடினோம் என் வகையில் அவற்றைப் பெறுவதற்கு எம்முடன் இணைந்திருக்க வேண்டும் என்றார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ந. சிவனடியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசாஇ பா.அரியநேத்திரன்இ மாகாண விவசாயத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம்இ மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.ச