நிறைவேற்று ஜனாதிபதி முறையின் அதிகாரங்களை 60 தொடக்கம் 65 சதவீதம் வரை குறைப்பதற்கு 19 வது அரசியலமைப்பு திருத்தம் உதவியதாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த திருத்தத்தை தயாரித்த குழுவின் பிரதானியும், ஜனாதிபதி சட்;டத்தரணியுமான ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
19 வது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் பற்றி விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
குறித்த அரசியலமைப்பு திருத்தத்தை தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருக்கு ஆதரவான உறுப்பினர்கள் ஊடாக இறுதிவரை முயற்சிகளை மேற்கொண்டதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.'
எவ்வாறாயினும், தற்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பில் அரசாங்கம் திருப்திகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.sa
