வடமாகாணத்தில் யாழ் மாவட்டத்திலுள்ள உஷ்மானியா .ம.வி,ஏ.பி. பாடசாலைக்கும் , மன்னார் எருக்கலம் பிட்டி முஸ்லிம் ம.வி,ஏ.பி. பாடசாலைக்கும் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரால் அதிபர் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தகுதிகள் இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 ஐச் சேர்ந்தோர், அல்லது அதிபர் தரம் 1, 2.1, 2.2 என்பவற்றைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என விண்ணப்பப்பத்திரம் வெளியாகி இருந்தது. மன்சவேரியார் ஆண்கள் தே.பா ,மன் சவேரியார் பெண்கள் தே.பா போன்றவற்றிற்கு ஏற்கனவே. கல்வியமைச்சால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதை நாம் யாவரும் அறிவோம்.
மாறாக மன்னார் மாவட்டத்தில் உள்ள இரண்டு முஸ்லிம் தேசிய பாடசாலைகளுக்கும் இது வரை தகுதியான அதிபர்கள் நியமிக்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக முந்நாள் கல்வியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தரம் 2.2 ஐச் சேர்ந்த புதிய அதிபர்களால் எப்படி தேசிய பாடசாலையைக் கொண்டு செல்ல முடியும்?
இப்பாடசாலையின் க.பொ.த உ/த,க.பொ.த சா/த ,தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்,இணைப்பாடவிதான மாவட்ட மாகாண அடைவுகள் போன்றவற்றை ஆய்வு செய்தால் நிலைமை புரியும் இவ்விடயத்தில் ஜனாதிபதி அவர்களும். பிரதமரும் , கல்வியமைச்சரும் தலையிட்டு இப்பாடசாலைக்கு விண்ணப்பங்கள் கோரி தகுதியான அதிபர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.தகைமையுள்ள முஸ்லிம் அதிபர்கள் இல்லாத பட்சத்தில் பொருத்தமான தமிழ் அதிபர்களை நியமிப்பத்தில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
முஸ்லிம்களின் கல்விக் கண்ணை திறந்து விட்டவர்கள் தமிழாசிரியர்கள் தான்.இருக்கின்ற முஸ்லிம் பாடசாலைகளின் சம்பவத் திரட்டுப் புத்தகங்களைப் புரட்டினால் முதலதிபராக தமிழ் அதிபர்களே கடமை செய்து உள்ளனர் என்பதை அறிந்துகொள்ளலாம்..இதுதான் யதார்த்தம்.
