ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்-
சமூகத்தின் சீர்கேட்டிற்கு அரசியல் வாதிகளே பொறுப்புதாரிகள் என்பதே நவீன சமூகத்தின் சம்பிரதாய பூர்வமான ஒரு நிலைப்பாடாகும்.இந்தக் கருத்திற்கு ஒரு வித்தியாசமான அனுகுமுறையை எடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை கொழும்பு-06,கல்யாணி வீதி,227/17 இலக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மத்திய நிலையம் எதிர்வரும் ஏப்ரல் 07ம் திகதி பி.ப 5 மணி முதல் பி.ப 7 மணி வரை நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.
ஒரு நல்லாட்சியின் மற்றைய நோக்கங்களை அனுகுவதற்கு முன்னர் மக்களின் தரத்தை உயர்த்துவதற்கு எத்தகைய ஆக்க பூர்வமானதும் அடிப்படையானதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே இந்நிகழ்வின் குறிக்கோளாகும்.
இந்நிகழ்வில் முப்பது வருடங்களிற்கு மேற்பட்ட அரசியல் அனுபவம் கொண்ட சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ ஏ.எம்.எம் நௌசாத் அவர்கள் முன்னணிப் பேச்சாளராக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.தனது முப்பது வருட கால அரசியல் பயணத்தில் தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களினையும்,உள்ளகப் பார்வையினையும் தன்னகத்தே கொண்டு உரையாற்றவுள்ளார்.
மேலும்,மிக இளம் வயதிலிருந்தே இவர் வாழ்ந்த சூழலில் உள்ளூர் மட்டங்களில் மட்டுமல்லாது தேசிய மட்டத்திலும் ஆற்றிய பணிகளின் அடிப்படையில் முதன்மையாகப் பெற்ற அனுபவங்களினைக் கொண்டு மாற்றங்களுக்கான சிபாரிசுகளையும் முடிவுளையும் உண்மைத் தன்மைகளை ஏற்றுக் கொள்ளும் அடிப்படையில் பெற்றுக் கொண்ட ஒருவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இவருடைய விரிவுரையின் தலைப்பானது 'நல்லாட்சிக்கான தேடல்,பிரதேச சபையின் தவிசாளராக இருந்த தனி மனித அனுபவம்' என்பதாகும். சம்மாந்துறை பிரதேச சபையானது இந்த நாட்டில் மிகத் திறமையாக நடாத்தப்பட்ட சபையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் இத் தலைப்பானது இவரிற்கு மிகப் பொருத்தாமானது என்பது இங்கே கோடிடத்தக்க மேலுமொரு விடயம் எனலாம்.
