பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மலேசியா நாட்டின் 'சரவாக்'தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக கல்லூரியின் பிரதிநிதிகள் இன்று 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை அவரது காத்தான்குடி காரியாலத்தில் வைத்து சந்தித்தனர்.
இச் சந்திப்பில் கிழக்கு மலேசிய சரவாக் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக கல்லூரியின் பணிப்பாளர்களான அமீன் அஸ்கர், ஏ.ஜி.ஏ.அஹமட் றிபாய் ஹாஜியார் (ஈ.ரி.ஏ. கம்பணி) உட்பட இக் கல்லூரியின் இலங்கைக்கான இணைப்பாளரும், முன்னாள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தனின் முஸ்லிம் சேவை பணிப்பாளருமான அஹமட் முனவ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது இலங்கையிலிருந்து கிழக்கு மலேசியா சரவாக்தொழில்நுட்பவியல் பல்கலைக்கழக கல்லூரிக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)
%2Bcopy.jpg)