பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் சிரமதான நிகழ்வு 19-04-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
(யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் தலைவர் எம்.ஏ.எம்.சயீத் தலைமையில் இடம்பெற்ற இவ் சிரமதான நிகழ்வில் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் உப தலைவர் எம்.எச்.எம்.அபீப்,கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.சிஹாப் உட்பட அதன் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி-அல்-ஹிறா மகா வித்தியாலயம் (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
குறித்த (யூஸ்) கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் காத்தான்குடி பிரதேசத்தில் சிரமதானம்,இரத்த தானம் ,கல்வி தொடர்பான இலவச வகுப்புக்கள் நடாத்துவது,நோயாளிகளை நலம் விசாரிப்பது போன்ற மனித நேயம் பேணும் சமூகப்பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)