நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொயிஸ்டன் மற்றும் அயரபி ஆகிய தோட்டங்களில் காலாவதியான திரிபோஷா பக்கெட்டுக்கள் இம்மாதம் 1ம் திகதி முதல் தோட்ட வைத்தியரினால் வழங்கப்பட்டு வந்துள்ளது.
நேற்றைய தினம் இத்தோட்டங்களில் உள்ள பெற்றோர்கள் திரிபோஷா பக்கெட்டுக்களை பார்க்கும் போது திகதி முடிவடைந்த நிலையில் திரிபோஷா பக்கெட்டுக்கள் வழங்கியுள்ளதாக கண்டு பிடித்துள்ளனர்.
இதன் பின்னர் சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ சுகாதார பரிசோதகருக்கு முறைபாடு செய்ததையடுத்து, சுகாதார பரிசோதக அதிகாரிகள் இன்று நேரடியாக சம்மந்தப்பட்ட தோட்டங்களுக்கு விஜயம் செய்து பரிசோதனைகளை மேற்கொண்ட போது இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட வைத்திய அதிகாரியை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு இந்த திரிபோஷாவை தயாரித்து உணவாக வழங்கியதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டனர்.
த.வி