இலங்கையில் ஊடகவியலாளர்களையும் ஊடக நிறுவனங்களையும் கண்காணிக்கும் நடவடிக்கைகள் தொடர்வதாக சர்வதேச ஊடக நிலையம் குற்றம் சுமத்தியுள்ளது.
சர்வதேச ஊடக நிலையத்தில், சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம், சர்வதேச பத்திரிகை நிறுவகம், சர்வதேச சுதந்திர வெளிப்பாட்டு பரிமாற்றகம் மற்றும் இலங்கையின் சுதந்திர ஊடக மையம் என்பன அங்கம் வகிக்கின்றன.
இந்தநிலையில் ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டுப்படுத்தப்படவில்லை.
எனினும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தணிந்துள்ளன. சுய தணிக்கை கொள்கை இன்னும் தொடர்கிறது. தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில் ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று சர்வதேச ஊடக நிலையத்தின் இலங்கை கிளை கோரியுள்ளது.
த.வி
