பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை தாறுல் ஹூதா அரபு இஸ்லாமிய கற்கைகள் மகளிர் கல்லூரின் புதிய மூன்று மாடிக் கட்டிட திறப்பு வைபவம் (07-03-2015); கல்லூரின் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரிஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்ட சவூதி அரேபியாவின் அல்-ரஸ் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலாநிதி அப்துல் அஸீஸ் ஹூமையின் அல்-ஹூமையின் கட்டத்தைத் திறந்து வைத்தார்.
சுமார் ஒரு கோடி ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கான நிதியை வழங்கிய சவூதி அரேபியாவைச் சேர்ந்த அஹமத் அப்துல்லாஹ் அர்ரஸீத், விஷேட அதிதியாகக் கலந்து கொண்டார். அதிதிகளாக சவூதி அரேபியாவைச் சேர்ந்த அப்துல்லா ஹவ்வாஸ், அப்துல் றஹுமான் திஹாம் அத்திஹாம், அனுசரணை வழங்கிய பரகஹதெனிய ஜம்மியத்துல் அன்சாரிஸ் சுன்னத்துல் முகம்மதியாவின் தலைவர் அஷ்செய்க் என்.பி.எம்.அபூபக்கர் சித்திக், பொதுச் செயலாளர் ஏ.எல்.கலீலுர் றஹ்மான் ஆகியோரை கல்லூரி அதிபர் எம்.எல்.முபாறக் மதனி வரவேற்றார்.
மேலும் விஷேட விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப். அக்கரைப்பற்று பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், கல்முனை பிரதேச திவி நெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ் உள்ளிட்ட உலமாக்கள். அதிபர்கள். ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், தனவந்தர்கள், வர்த்தகர்கள், பெற்றோர்கள் என பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.