குறிப்பிட்ட பிரேரணையை சபையில் கிழக்கு மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல்.தவமால் வாசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எதிர்கட்சி உறுப்பினர்களால் குறிப்பிட்ட விடையம் தொடர்பாக உரை நிகழ்த்த வேண்டும் என்று முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்ததன் காரணத்தினால் 30 நிமிடங்கள் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு உரை நிகழ்த்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற வாக்கெடுப்பில்
மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் பிரதி தவிசாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று
19 உறுப்பினர்களும்,
பதவியில் இருக்க வேண்டும் என்று 11 உறுப்பினர்களும்
வாக்களித்தனர்.
அதன் பின்னர் புதிய பிரதி தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இந்திர குமார் பிரசன்ன நியமிக்கப்பட்டார்.
இவரை பிரதி சபாநாயகராக நியமிக்க கிழக்கு முதலமைச்சரால் முன்மொழியப்பட்டதனை முன்னாள் பிரதி தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஆமோதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.