புகையிரத சேவை பயண நேரங்களில் மாற்றங்கள்!

எஸ்.அஷ்ரப்கான்-
லங்கை புகையிரத சேவை பயண நேரங்களில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி முதல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மருதானை மத்திய புகையிரத கட்டுப்பாட்டு அலுவலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாற்றங்கள் தொடர்பான அறிவுறுத்தல்கள் சகல புகையிரத நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த வகையில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி காலையில் 7.15 மணிக்கு புறப்படும் உதய தேவி புகையிரதம் 7.30 க்கு புறப்பட்டு 4.30 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். காலை 10.30 க்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி நோக்கி புறப்படும் புகையிரதம் காலை 11.30க்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு மாகோ சந்தியை சென்றடையும். 

மட்டக்களப்பிலிருந்து மாலை 5.45 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும் இரவு புகையிரதம் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கல்லோயா சந்தியில் திருகோணமலையிலிருந்து வரும் புகையிரதத்துடன் இணைக்கப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். அது போல் வழமையாக இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படும் புகையிரதம் 8.30 க்கு புறப்பட்டு அதிகாலை 5.10 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

அதுபோன்று கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி காலை 6.10 க்கு வரும் புகையிரதம் 7.15 க்கு புறப்பட்டு 4 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும். இரவு 7.15 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் புகையிரத நேரத்தில் மாற்றமில்லை. அது அதிகாலை 4.12 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும். கொழும்பிலிருந்து இரவு 9 மணிக்கு திருகோணமலை, மட்டக்களப்பு நோக்கி புறப்படும் புகையிரதம் 9.45 மணிக்கு புறப்பட்டு காலை 7.10 மணிக்கு மட்டக்களப்பை வந்தடையும். மேலும், மாகோவிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் புகையிரதம் மட்டக்களப்பிற்கு மதியம் 1.35 மணிக்கு வந்து சேரும். 

மட்டக்களப்பிலிருந்து காலை 5.10 க்கு புறப்படும் புகையிரத பஸ் கல்லோயாவில் 9.02 க்கு சென்றடையும். மீண்டும் அதே புகையிரத பஸ் வண்டி கல்லோயாவிலிருந்து மதியம் 1.30 க்கு புறப்பட்டு மட்டக்களப்பிற்கு மாலை 4.55 க்கு வந்து சேரும். அதுபோல் வவுணியா, யாழ்ப்பாணம் போன்ற இடங்களுக்கான புகையிரத சேவை நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -