நீர் எமது உயிர். எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டம் அக்கரைப்பற்று திட்ட முகாமையாளர் காரியாலய மண்டபத்தில் திங்கட்கிழமை (30) இடம்பெற்றது.
உலக நீர் தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று நீர்ப்பாசன திட்ட முகாமையாளர் காரியாலயத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று நீர்ப்பாசன வதிவிட திட்ட முகாமையாளர் எம்.எம்.நழீம் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
இந்நிகழ்வில், அம்பாறை நீர்ப்பாசன திணைக்கள நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.நவாஸ், வளவாளராக கலந்து கொண்டு நீரின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் வதிவிட திட்ட முகாமையாளர் காரியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.பாயிஸ் உட்பட 50க்கு மேற்பட்ட விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.

.jpg)
.jpg)
.jpg)