நான் அதிகமாக பேசினால் அது தவறாகிவிடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹொரன மாதுராவ பிரதேசத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஊடகவியலாளர் ஒருவர் இன்று கண்டியில் இடம்பெறவுள்ள பேரணியில் கலந்து கொள்வீர்களா என்று கேள்வியெழுப்பிய போது, அதற்கு பதிலளித்த மஹிந்த, பேரணியில் கலந்துகொள்ளுமாறு தனக்கு அழைப்புவந்துள்ளது ஆனாலும் இன்று திருமண வீடொன்றில் கலந்துகொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவிக்கையில், உண்மையான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கொள்கையை நான் பாதுகாக்கின்றேன். மேலும் நான் பேசியது போதுமா? நான் அதிகமாக பேசினால் தவறாகிவிடும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.
