எலிசபெத் மகாராணியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (07) பிரித்தானியா செல்லவுள்ளார்.
நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா செல்லும் ஜனாதிபதி மகாராணியுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்றும் அதனையடுத்து மகாராணியுடன் விருந்துபசாரத்தில் கலந்துகொள்வார் என்றும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமருடன் கலந்துரையாடவுள்ள ஜனாதிபதி 9ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் இளைஞர் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது பிரித்தானிய விஜயம் இதுவாகும்.
