அம்பாறை மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் ஒன்று கூடல்







அபூ-இன்ஷாப்-

ம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்) பாடசாலைகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த அஹதிய்யா பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கிடையிலான ஒன்று கூடல் நிகழ்வு இன்று (02) சம்மாந்துறை அல்-இக்றாஹ் கல்வி நிலையத்தில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்) பாடசாலைகள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி யூ.எல்.றிபாயூதீன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்) பாடசாலைகள் சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எல்.மன்சூர், சம்மாந்துறை வலயத் தலைவர்எம்.எல்.ஜூனைட், அக்கறைப்பற்று வலயத்தின் தலைவர் மௌலவி எம்.எம்.நபீஸ்,கல்முனை வலய செயலாளர் மௌலவி எம்.ஐ.எம்.ஹிதாயதுல்லா, அக்கறைப்பற்றுவலய செயலாளர் எஸ்.றபீயுத்தீன் உட்பட பாடசாலை அதிபர்கள் மற்றும்நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அஹதிய்யா (தஹம்) ஞாயிறு பாடசாலைகளை நடாத்துவதில் அண்மைக்காலமாககாணப்பட்டு வருகின்ற குறைபாடுகள் சிக்கல்கள் தொடர்பாக தனித்தனியாகஆராயப்பட்டதுடன் அவற்றுக்கான தீர்வுகளளைப் பெற்றுக் கொள்வதுதொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய அம்பாறை மாவட்ட அஹதிய்யா (தஹம்)பாடசாலைகள் சம்மேளத்தின் தலைவர் மௌலவி யூ.எல்.றிபாயூதீன்உரையாற்றுகையில் அம்பாறை மாவட்டத்தில் அஹதிய்யா (தஹம்) ஞாயிறுபாடசாலைகள் பெரும்பாலான பிரதேசங்களில் அரச பாடசாலைகளில் நடைபெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த சில வருடங்களாக அரச பாடசாலைகளில் அஹதிய்யா (தஹம்) ஞாயிறுபாடசாலைகளை நடாத்த முடியாது என்பதாக பாடசாலைகளின் அதிபர்கள் சிலர்மறுத்ததனால் இந்த பாடசாலைகளை சிலர் தனிப்பட்ட இடங்களில் நடாத்திவருகின்றனர் இதனால் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளினாலும்மாவட்ட நிர்வாகிகளினாலும் பாடசாலைகளை கண்கானிக்க முடியாத நிலைதோன்றியது.

இதனை கருத்தில் கொண்டு அரச பாடசாலைகளில் இந்த பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிசாம் அவர்களை சந்தித்து கலந்துரையாடப்பட்டதாகவும் இதனை ஏற்றுக் கொண்ட மாகாண கல்விப்பணிப்பாளர் அவர்களினால் சகல பாடசாலைகளுக்கும் அஹதிய்யா (தஹம்)ஞாயிறு பாடசாலைகளை நடாத்த அனுமதி வழங்குமாறு சுற்று நிருபம்அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விடயத்தை கவனத்தில் கொண்டு சகல அஹதிய்யா பாடசாலைகளும் அரசபாடசாலைகளில் நடாத்து மாறும் தமக்கு வழங்கப்பட்ட அமானிதமான பொறுப்பைசரியான முறையில் இறைவனின் திருப்பொருத்தத்துக்கு அமைவாகவும் நடாத்தமாறும் கேட்டுக் கொண்டார்.

எதிர் காலத்தில் எமது பாடசாலைகள் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின்அதிகாரிகளின் கண்கானிப்பின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -