அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மனு!

மைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்றைய தினம் தேசிய சுதந்திர முன்னணியினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் ராஜித சேனாரட்ன மீன்வளத்துறை அமைச்சராக இருந்த போது கடல் வளத்தை சூறையாடி 2 ஆயிரம் மில்லியன் ரூபாவை முறைகேடாக பெற்றுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பலவந்தமாக இந்த வளங்களை அமைச்சர் ராஜித சேனாரட்ன சூறையாடியுள்ளார் என முறைப்பாட்டை சமர்ப்பித்ததன் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

எனவே தற்போதைய நல்லாட்சியின் கீழ் இவ்வாறான மோசடிகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -