நான் அரசியலில் இணைய போவதாக பல வதந்திகள் பரவுகின்றன-சங்கக்கார!

நான் அரசியலுக்கு வரபோகிறேன் என செய்திகள் வெளியாகியுள்ளதாக எனது நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்டேன் எனவும், எனக்கு அரசியலில் இணைவதற்கு எவ்வித விருப்பமும் இல்லை எனவும் இலங்கை கிரிகெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் வலையத்தளத்தில் இந்த தகவலை சங்கக்கார வெளியிட்டுள்ளார்.

இறுதியாக நிறைவடைந்த போட்டிக்கு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள். எங்களது கிரிகெட் சுற்றுப்பயணம் சிறப்பானதாகவுள்ளது.

மேலும் மீண்டும் நான் அரசியலில் இணைய போவதாக பல வதந்திகள் பரவுகின்றன. அவ்வாறான வதந்திகள் அடிப்படையற்ற மற்றும் பொறுப்பற்றவையாகும்.

நான் முன்னர் கூறியது போன்றே எனக்கு இப்போழுதும் எதிர்காலத்திலும் அரசியலில் இணைவதற்கு ஈடுபாடு இல்லை.


இந்த கதைகளை தயவு செய்து புறக்கணித்து விடுங்கள் நான் எனது அடுத்த போட்டியை குறித்தே சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன் என குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -