ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
தோப்பூர் றோயல் கணிஸ்ட பாடசாலையின் 2015ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை வளாகத்தில் அதன் அதிபர் முஹம்மட் அணஸ் தலைமையில் நடைபெற்றது.
கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையின் முதலாவது விளையாட்டுப் போட்டியே இதுவாகும்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் பிரதம அதிதியாக கலந்து கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார். தோப்பூர் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.ஏ.ஜப்பார் மற்றும் குச்ச வெளி பிரதேச சபை உறுப்பினர் சல்மான் பாரீஸ், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜீ.எம்.நிஸ்மி, பியுப்பிள்ஸ் எய்ட் நிறுவனத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.தாணீஸ் உட்பட பாடசாலை அதிபர்கள் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)