எம்.வை.அமீர் -
கொய்க்கா நிதி உதவியுடன் ஆசியான் மன்றம், கல்முனை மாநகரசபையில் நடைமுறைப்படுத்தி வரும் செயத்திட்டத்துக்கு அமைவாக குறித்த திட்டத்தின் கீழ் கல்முனை மாநகரசபையின் வருமானப்பிரிவை வினைத்திறன் மிக்கதும், பணிகளை துரிதமாக மேற்கொள்ளக்கூடியதுமான விதத்தில் மேன் படுத்துவதர்க்காக ஆசியான் மன்றம் ஒரு தொகுதி கணணி உபகரணங்களை சாய்ந்தமருது பரடைஸ் வரவேட்பு மண்டபத்தில் 2015-03-09ல் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வழங்கி வைத்தது.
உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சின் அனுசரணையுடன் ஆசியான் மன்றம், கல்முனை மாநகரசபையுடன் இணைந்து செயற்படுத்திவரும் செயத்திட்டத்துக்கு அமைவாக இன்று 2015ம் வருடத்துக்கான வருமானத்தை அதிகரிப்பதற்கு கையாள வேண்டிய யுத்திகள் தொடர்பாக கல்முனை மாநகரசபையின் நிதிப்பிரிவில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விளிப்புட்டும் செயலமர்வு இடம்பெற்ற போதே மேற்படி கணணி உபகரணத் தொகுதியை ஆசியான் மன்ற திட்டமிடல் அதிகாரி எம்.ஐ.எம்.வலீத் அவர்கள் கல்முனை மாநகரசபையின் ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி அவர்களிடம் கையளித்தார்.
நிகழ்வில் கல்முனை மாநகரசபையின் செயலாளர் ஏ.எல்.எம்.அசுஹர், கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் உட்பட கல்முனை மாநகரசபையின் முதல்வர் நிஸாம் காரியப்பர் அவர்களின் பிரத்தியோகச் செயலாளர் ரீ.எல்.எம்.பாறுக் போன்றோரும் பங்கு கொண்டிருந்தனர்.
.jpg)
.jpg)
.jpg)