யாழ் மாவட்டத்தில் மீள் குடியேற்ற நம்பிக்கை -யாழ் மாநகர முன்னாள் உறுப்பினர் சரப்!

பாறுக் சிகான்-
யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ளுர் தனவந்தர்களின் முயற்சியின் பலனாக மீள் குடியேற்ற நம்பிக்கை முஸ்லீம் மக்களிடையே தோற்றுவித்துள்ளதாக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சரபுல் அனாம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் 

யாழ் முஸ்லீம் மக்கள் கடந்த கால யுத்தத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டு சொந்த இடங்களை விட்டு வெளியேறினார்கள்.ஆனால் இன்று மீளவும் குடியேற விரும்பினார்கள்.ஆனால் சில தடைகள் அவர்களுக்கு ஏற்பட்டது.அரச இயந்திரங்கள் தவிரந்த விடயங்களிற்கு அப்பால் பொருளாதார நலன்கள் அவர்களிற்கு கை கொடுக்க வில்லை.என தெரிவிக்கின்றார்
.
ஆனால் இவரது முயற்சியின் பலனாக 1990 ஆண்டு முஸ்லீம் மக்கள் குடியிருந்த இடம் தற்போது மீளவும் புத்துயிர் பெற்று வருகின்றது.இப்பகுதியில் 30க்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியேற விரும்புகின்றனர்.
இதற்கு காரணம் வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக இப்பகுதிக்கு மின்சாரம் வழங்கப்பட்டதாகும்.இம்முயற்சியானது முன்னாள் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பின் பெயரில் இவ்வுறுப்பினரின் அக்கறையினால் பெற்றுக்கொடுக்கப்பட்டது.

கிராம சேவகர் 88 இல் உள்ள பரச்சேரி கிராமம் என்று அழைக்கப்படும் இப்பகுதி மீளவும் புத்துயிர் பெறுகின்றது.

சிறிது சிறிதாக அப்பகுதி மக்கள் யாழ் மாநகர முன்னாள் உறுப்பினருடன் இணைந்து வீதியை புனரமைத்துள்ளார்கள்.அத்துடன் இப்பகுதிக்கு யாழ் மாநகர ஆணையாளரின் ஆலோசனையுடன் மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருளில் முழ்கி காணப்பட்ட இப்பிரதேசம் இனிவரும் காலத்தில் ஒளி பெறப்போகின்றது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான பாடுபட்ட அவ்வுறுப்பினருக்கு மக்கள் நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேம் பல ஏக்கர் விஸதீரணம் கொண்ட பகுதியாகும்.இதனை அபிவிருத்தி செய்ய தனவந்தர்கள் சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

எனவே இப்பிரதேச மக்களின் ஏனைய அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய உதவ முன்வருபவர்கள் யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சரபுல் அனாம் அவர்களை 0776590632 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்ள முடியும்.








வீடியோ பார்க்க---->
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -