சீ.எம்.ஊடகப்பிரிவு-
கிண்ணியா முஜாஹிதா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்று மாலை (30) கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.நஜீம் தலைமையில் இடம்பெற்றது.
இவ்விளையாட்டுப் போட்டிக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமத், பிரதி அமைச்சர் எம்.எஸ். தெளபீக் ஆகியோரிடம் பாடசாலையின் அதிபர் மற்றும் அபிவிருத்திக் குழுவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையின் தேவை கருதி முதல் கட்டமாக 50 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றுக்கான அடிக்கல் நடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவ, மாணவிகளுக்கான பரிசில்களும் பிரதம அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வுக்கு கல்வி அதிகாரிகள் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)