அஸ்ரப் ஏ சமத்-
பெப்ரவரி 14ஆம் தகதி காதலர் தினமாகும் இதனை முன்ணிட்டு ஜே.வி.பி கட்சியின் கீழ் உள்ள சோசலிச இளைஞர் சங்கம் கல்கிசை பீச்சில் காதலர்களை வரவளைத்து பல்வேறு நிகழ்வுகளை நடாத்தியது.
இங்கு காதலுக்கு விலைமதிப்பற்ற சீதனமற்ற, சாதி வேற்றுமை அற்ற நாளைக்காக எனும் தலைப்பில் கொண்டாடப்பட்டது. இங்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சோஷலிச இளைஞர் அமைப்பின் தலைவர் விமல் ரத்நாயக்க உரையாற்றுகையில்
இங்கு உங்கள் காதல் சிங்களாமா? தமிழா? முஸ்லீமா? உங்கள் காதல் பௌத்தமா? இந்துவா? இஸ்லாமா? கத்தோலிக்கமா?
உங்கள் காதலின் சாதி என்ன?
எனவே காதலர் தினம் இனம், மொழி,மதம் சாதி என்ன? எனவே காதலர் தினம் இனம், மொழி மதம் சாதி வேற்றுமைகளை பாராமல் தமது காதலனை அல்லது காதலியை தேர்ந்தெடுக்கும் உங்களுக்கே உரியது. என்று நாம் கூறினால் நீங்களும் அதை ஏற்றுக்கொள்ள தயங்குவீர்களா?
வெலன்டைன் திருத்தந்தை காதலுக்கு எதிரான சர்வதிகார முடிவுகளுக்கும் இன்றைய கால சீசர்களுக்கு எதிராகவும் தனது உயிரை தியாகம் செய்தார். எனவே இவ்வருடத்தில் காதலர் தினமான பெப்ரவரி 14ம் திகதியில் ;நாம் உண்மையான வர்ணங்களை தேடிச்சொல்வோம்.
காதலிப்பதற்கு இனம், மதம், மொழியை தடையாக்கிக் கொள்வதை நிறுத்திக் கொள்வோம். காதலுக்காக சீதனத்தை சொத்துக்களை சேர்த்துக் கொள்வதை நிறுத்திக் கொள்வோம். குhதலி அல்லது மனைவியை வீட்டு அடிமையாக்குவதை நிறுத்திக் கொள்வோம். குhதலை அன்பினால் மனிதாபிமானத்தால் நிரப்புவோம் அப்பொழுது உங்களுக்கு காதலின் உண்மையான வர்ணங்களை கண்டுபிடிக்க முடியும். அது மிகவும் இனிமையானது நீளம், நாவல், சிகப்பு, மஞ்சல் செம்மஞ்சல் பச்சை வெள்ளை போன்ற வர்ணங்களில் நிரம்பிய வானத்தை போன்று விசித்திரமான காணப்படும்.