கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்டின் வேண்டுகோளை ஏற்று உள்நாட்டு போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஏறாவூர் டிப்போக்கு ஏற்கனவே அவரால் வழங்கப்பட்ட 10 பஸ்க்கு மேலதிகமாக மேலும் ஒரு பஸ் வண்டியை வழங்குவதட்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பயணிகளின் வசதி கருதி ஏறாவூர் டிப்போ முகாமையாளர் ஹனி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பஸ் வண்டி போதாது என்றும் இன்னும் மேலதிகமாக பஸ் வண்டிகளை வழங்குவதட்கு நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்குமாகாண முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார் .
போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக் கிழக்கு மாகாண டிப்போக்களுக்கு பயணிகள் நலன் கருதி பஸ் வண்டிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றமையால் இந்த கோரிக்கையை உடன் கவனத்தில் எடுத்த முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் போக்குவரத்து பிரதி அமைச்சரிடம் உரிய நிலைமையினை எடுத்து விளக்கியதையடுத்து மேலதிகமாக ஒரு பஸ் என்ற வகையில் மொத்தமாக 11 ஏறாவூர் டிப்போக்கு வழங்கப்பட்டுள்ளது.