மஹிந்தவின் தொலைபேசிய துண்டித்த சிறிபால டி சில்வா!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அவரது அழைப்பை தொடர்ந்தும் துண்டித்துள்ளதாக தெரியவருகிறது.

புதிய எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பை வேண்டும் என்றே புறக்கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களை எடுக்கும் சகல அதிகாரங்களையும் ஒப்படைத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஏன், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற குழு தலைவரான எதிர்க்கட்சித் தலைவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறார் என்பது தெளிவாகவில்லை.

எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு அதிகாரி, பின்னர் தொடர்பு கொள்வார் என மகிந்த ராஜபக்சவிடம் கூறிய போதிலும் நிமால் சிறிபால டி சில்வா, தனது அரசியல் வாழ்க்கைக்கு அவருடனான தொடர்பு சிறந்ததாக இருக்காது எனக் கருதி, முன்னாள் ஜனாதிபதியுடனான தொடர்பை புறக்கணித்துள்ளார்.

நாட்டின் அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பை நிமால் சிறிபால டி சில்வா கொண்டிருப்பது ரகசியமான விடயமல்ல.

அதேவேளை இரண்டு வருடங்களுக்காவது தேசிய அரசாங்கம் ஒன்று ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால ஏற்கனவே அறிவித்துள்ளார்.

முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தான் பிரதமராக பதவி வகிக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என நிமால் சிறிபால டி சில்வா கடும் நம்பிக்கையில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு வந்தால், எதிர்க்கட்சித் தலைவரின் எதிர்கால திட்டங்களுக்கு வேட்டு வைத்து விடுவார் எனவும் சில்வா எண்ணுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்வின்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -