நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் கெப்டன் கயான் விதானகே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ஜனநாயகக் கட்சியில் இருந்த போது ஊடக செயலாளராக கயான் விதானகே பணியாற்றினார்.
இந்த நிலையில், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கெட்டகொட மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார்.
எவ்வாறாயினும் எந்த சந்தர்ப்பத்தில் வேண்டுமானாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு விட்டுக்கொடுக்க தயார் என கெட்டகொட ஊடகங்களிடம் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
ஜெனரல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய தயார் என பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் தலைமறைவாகியுள்ளதாக கயான் விதானகே குறிப்பிட்டுள்ளார்.
