கிழக்கு மாகாண சபையில் மாகாண தேசிய அரசாங்கம் போன்ற மாதிரிய உருவாக்குவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து அழைப்பு விடுத்துள்ளது.
இதேவேளை சற்று முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இம்போட் மிரருக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் தவம் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான பேச்சுவார்த்தை சற்றுமுன் பூர்த்தியடைந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
