மைத்திரி அரசு ஆமை வேகத்தில் செயற்படுகின்றது- ரில்வின் சில்வா

னாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆமை வேகத்தில் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றம்சாட்டியள்ளது. 

ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக தண்டனை வழங்குவதில் காணப்படும் அசமந்தப் போக்கு தேசிய அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடையக் காரணமாக அமையலாம் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளா் ரில்வின் சில்வா எச்சாிக்கை விடுத்துள்ளாா்.

‘அதிகார மாற்றம் மற்றும் மக்கள் சவால்’ என்ற தொனிப்பொருளில் மாத்தளையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -