இன்று முக்கிய நிறுவனங்களுக்கு உரிய உயர்பதவி நியமனங்களை அமைச்சர் ஹக்கீம் வழங்கிவைத்தார்!

கர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் சட்டத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தமது அமைச்சின் கீழ் வரும் முக்கிய நிறுவனங்களுக்கு உரிய உயர்பதவிகள் சிலவற்றுக்கு நியமனங்களை வழங்கியுள்ளார். 

நகர அபிவிருத்தி அதிகாரசபை தலைவராக ரஞ்சித் பெர்னான்டோவும், அதன் பணிப்பாளர் நாயகமாக நயன மாவில்மட மற்றும் அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதே வேளையில் நீர் வழங்கல்; வடிகாலமைப்பு சபையின் தலைவராக பொரியியலாளர் கே.ஏ. அன்சார் அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளதோடு அதன் செயலாற்று பணிப்பாளராக பி.ஐ.ரி. மஹிலால் சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளார்;. 

நில மறுசீரமைப்பு; அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சட்டத்தரணி எம்.எச்.எம். சல்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை அமைச்சர் ஹக்கீம் திங்கட்கிழமை முற்பகல் (02) தமது அலுவலகத்தில் வழங்கி வைத்தார். 

டாக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் 
ஊடகச் செயலாளர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -