மட்டகளப்பில் மோட்டார் சைக்கிள்கள் வழங்கிவைப்பு பிரதம அதீதியாக பிரதி அமைச்சர் அமீர் அலி!

அஹமட் இர்சாட்-
வெளிக்கல நிருவாக உத்தியோகத்தர்களின் சேவையினை இலகுவாக்கும் முகமாக அரசாங்கத்தினால் சலுகை அடிப்படையிலான மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வானது இன்று திங்கட் கிழமை (02.02.2015) மட்டகளப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் மட்டகளப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எஸ்.சார்ள்ஸ் தலைமையில் இடம் பெற்றது. 

இவ்வைபவத்துக்கு பிரதம அதீதியாக சமூர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டு உதியோகபூர்வமாக மோட்டார் சைக்கிள்களை வெளிக்கல உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைத்தார்.

மட்டகளப்பு மாவட்டத்தில் நான்காயிரம் உத்தியோகத்தர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட இருந்தும் முதற்கட்டமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கே சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்ட இவ்வைபவத்தில் தமிழரசுக்கட்ச்சியின் பாரளுமன்ற உறுப்பினர் பொன்செல்வராச, உதிவி அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள்இ பிரதேச சபை தவிசாளர்கள்,உறுப்பினர்கள், கிராம சேவையாளர்கள், நிருவாக உதியோகத்தர்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் அமீர் அலி.....

மோட்டார் சைக்கிள்கள் கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம். ஆனால் இந்த அரசியல் மாற்றம் ஏறபடுவதற்கு காரணமாய் இருந்த உங்களைப் போன்றவர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகவே நான் இதனைப் பார்க்கின்றேன். 

அதே போன்று எமது மாவட்டதில் அரசியல்வாதிகளக இருக்கலாம் அல்லது அரச உயர் அதிகாரிகளாக இருக்காலாம் ஆனால் எவரும் நாங்கள் மக்களுடைய எஜமானர்கள் என்று நினைத்து செயற்படக் கூடிய நிலவரத்தில் எமது மாவட்டம் எதிர்காலத்தில் இருக்க முடியாது என தான் மிகவும் இருக்கமாக உள்ளேன் எனக் கூரினார்.

மக்களுக்கு சேவை செய்யவதற்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களான நீங்கள் தனிப்பட்ட சுயலாபங்களுக்காக அரசியல் வாதிகளுக்காகவோ அல்லது அரசியல் வாதிகளின் அழுத்தங்களுக்கு பனிந்தோ வேலை செய்வதிலும் இருந்து விடுபட்டு கெளரவமான முறையில் சேவை செய்கின்ற பொழுதுதான் இந்த மாவட்டத்திலும் நாட்டிலும் எல்லோருக்கு நல்ல சேவையையும் நல்லாட்ச்சியையும் வழங்க முடியும் எனத் தெரிவித்தோடு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படாமல் உள்ள ஏனைய உத்தியோகத்தர்களுக்கு மிக விரைவில் சைக்கிள்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -