ஸ்ரீ.மு.கா இன் வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ எச்.எம். ரயீஸ் அவர்களின் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து மன்னார் மாவட்ட மக்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கான தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு அண்மையில் உறுப்பினரின் மன்னார் காரியாலயத்தில் நடைபெற்றது.
மேலும் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பாலர் பாடசாலைகளுக்கும் கதிரை மேசைகள் அளுமாரிகள் உட்பட தேவையான கட்பித்தல் பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஏ.சி.முசாதிக், மன்னார் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.இஸ்ஸதீன், வட மாகாண சபை தேர்தல் ஸ்ரீ.மு.கா. முதன்மை வேட்பாளர் எஸ்.எம்.சபீன் உட்பட திணைக்கள அதிகாரிகள் அந்தந்த ஊர் முக்கியஸ்தர்கள் விளையாட்டு கழக உறுப்பினர்கள் மு.கா.போராளிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் அடுத்த வாரம் கிராம அபிவிருத்தி மாதர் சங்கங்களுக்கு கதிரைகள் வழங்க உள்ளத்தோடு குடி நீர் வசதிகளுக்காக குழாய் நீர் திட்டமும் ஆரம்பிக்கப்பட உள்ளது.
மேலும் தங்கள் ஊர்களில் மேட்கொள்ள வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாக மன்னார் பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள உறுப்பினரின் காரியாலயத்தில் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்குமாறு மாகாண சபை உறுப்பினர் எச்.எம்.ரயீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காரியாலய விலாசம்....
.jpg)
.jpg)
.jpg)
.jpg)