சிறுபான்மைச் சமூகங்களின் மனங்களைப் புண்படுத்தி ஆட்சி செய்ய முடியாது-அஷ்சேய்க் முபாறக் மதனி!

பி.எம்.எம்.ஏ.காதர்-
புதிய ஆட்சி மாற்றத்திற்கு சிறுபான்மைச் சமூகங்களின் வாக்குகள் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றது என்ற படிப்பினையை பெரும்பான்மைச் சமூகம் உணர்ந்து கொள்வதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தல் வழிவகுத்திருக்கின்றது. என மருதமுனை தாறுல் ஹூதா மகளிர் அறபுக் கல்லூரி அதிபர் அஷ்சேய்க் எம்.எல்.முபாறக் மதனி தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சி பற்றி வினவியபோதே அஷ்சேய்க் எம்.எல்.முபாறக் மதனி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

யாராக இருந்தாலும் சிறுபான்மைச் சமூகங்களின் மனங்களைப் புண்படுத்தி ஆட்சி செய்ய முடியாது என்ற உண்மையையும் இந்த ஜனாதிபதித் தேர்தல் வெளிக் கொண்டு வந்திருக்கின்றது. 

சிறுபான்மைச் சமூகங்களை அடக்கி,ஒடுக்கி ஆட்சி செய்ய முடியாது என்பதே யதார்த்தமாகும். 

முஸ்லீம்களுடைய சமய விவகாரங்கள் அவர்களுடைய உரிமையாகும் இதுபற்றி முஸ்லீம்கள் யாருக்கும் அளுத்தம் கொடுக்கவுமில்லை,தொல்லை கொடுக்கவுமில்லை ஆகவே முஸ்லீம்களின் சமய விவகாரங்களில் ஏனையவர்கள் தலையிடாமல் இருப்பது இன நல்லுறவை வளர்ப்பதற்கு வழிவகுக்கும். 

இந்த நாட்டில் சமயரீதியாக பௌத்தர்களுக்கும்,கிருஸ்தவர்களுக்கும்,என்ன உரிமை இருக்கின்றதோ அதே சம உரிமையை இந்துக்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இந்த ஆட்சியில் வழங்கப்படவேண்டும் என்பதே சிறுபான்மைச் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

புதிய ஆட்சி மாற்றத்திற்கு சிறுபான்மை தமிழ்;,முஸ்லீம் மக்களின் வாக்குப் பலம்தான் முக்கிய காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்த உண்மைக்கு எதிராக சில சக்திகள் செயற்பட்டு முஸ்லீம்களைப் பிரிப்பதற்கான செயலில் இறங்கலாம் இதில் முஸ்லீம்கள் அவதானமாக இருக்க வேண்டும். 

இதே வேளை பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் ஒரு துவேச உணர்வு வளர்க்கப்படுவதற்கான வாய்ப்பும் இருக்கின்றது இந்த விடயத்தை புதிய ஆட்சியாளர்கள் மிகவும் கவனமாகக்கையாள வேண்டிய தேவையும் இருக்கிறது.

மேலும் இந்த ஆட்சி மாற்றத்திற்காக முஸ்லீம்கள் பெரிய அளவில் வெற்றிக் கொண்டாட்டங்களைக் கொண்டாட வேண்டிய தேவை இல்லை இதில் முஸ்லிம்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 

சிறுபான்மை மக்களின் வாக்குகளை மாத்திரம் கொண்டு வெற்றிபெறவில்லை இந்த வெற்றியில் முஸ்லீம்களுக்கும் பங்கு இருக்கின்றது என்ற அடிப்படையில் செயற்படவேண்டும்.

புதிய அரசில் சமயங்களுக்கு தனி அமைச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டிருப்பது சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒரு நல்ல சமிக்கையாகத் தென்படுகின்றது.

இருந்த போதிலும் சிறுபான்மைச் சமூகளின் பல பிரச்சினைகள் கிடப்பில் போடப் பட்டிருக்கின்று இவற்றை தூசு தட்டி வெளியே கொண்டு வந்து தீர்க்க வேண்டிய பொறுப்பும் இந்த அரசுக்கு இருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -