கல்முனை ஐக்கிய சதுக்க நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த முதல்வர் நடவடிக்கை!

அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை மாநகர சபையினால் சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் கல்முனை நகரில் அமைக்கப்பட்டு வருகின்ற ஐக்கிய சதுக்க நிர்மாணப் பணிகளை மாநகர முதல்வர் சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் நேற்று அங்கு விஜயம் செய்து பார்வையிட்டார்.

இதன்போது நிரம்மணப் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவர் ஆராய்ந்ததுடன் அவற்றை மேலும் துரிதப்படுத்துவது தொடர்பில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களுடன் கலந்துரையாடினார்.

இதில் முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக், விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர முதல்வர் எம்.நிசாம் காரியப்பர் அவர்களின் கருத்திட்டத்தில் உருவான ஐக்கிய சதுக்க நிர்மாணத்திற்கான முதற்கட்ட அடிக்கல் கடந்த வருட முற்பகுதியில் நடப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் பிறந்த தினமான கடந்த ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2 கோடி ரூபா செலவிலான இத்திட்டத்தின் ஆரம்பப் பணிகளுக்காக முதல்வர் நிஸாம் காரியப்பரின் வேண்டுகோளின் பேரில் ஆசிய மன்றத்தின் கொய்கா செயற்திட்டத்தின் கீழ் 2 மில்லியன் ரூபாவும் இரண்டாம் கட்டமாக வாகனத் தரிப்பிட அமைப்புக்காக 4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்தது. .

ஐக்கிய சதுக்க திட்டத்தின் கீழ் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் பார்வையாளர் அரங்கு அமைவதுடன் வர்த்தகத் தொகுதி, உணவகம் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 

இதன் மூலம் இரவு நேரத்திலும் கல்முனை நகரம் பொது மக்கள் மற்றும் பயணிகளின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

அத்துடன் நீண்ட காலமாக மிக மோசமான நிலையில் காணப்பட்ட கல்முனை தனியார் பஸ் நிலையம் சகல வசதிகளும் கொண்டதாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -