நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வர ஆலய ஸ்ரீ காயத்ரி பீடத்தில் மகாசிவராத்திரி விழா!

நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வர ஆலய ஸ்ரீ காயத்ரி பீடத்தில் மகாசிவராத்திரி விழா 17.02.2014 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி தொடக்கம் மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வுகள் பி.பகல் 04.00 மணிக்கு குரு அபிஷேகம் தொடர்ந்து ஸ்ரீலங்காதீஸ்வர மஹா மிருத்யுஞ்ஜெய தேவருக்கு ஸ்நபன அபிஷேகமும், முதல் ஜாமப் பூஜையும் இடம்பெறும்.

மா 6.30 மணி தொடக்கம் அடியார்;கள் தங்கள் கரங்களினால் ஸ்ரீலங்காதீஸ்வரப் பெருமானுக்கும்,108 பாணலிங்ககளுக்கும் பால்,இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தல் இடம்பெறும்.

இரவு 09.00 மணிக்கு விஷேட அபிஷேகத்துடன் இரண்டாம் ஜாமப்பூஜைகளும் தொடந்து சிவபெருமானின் திருவுருவச்சிலை, பாணலிங்கங்கள், குருபாதரட்ஷை, ஆகியன ஸ்ரீ முருகேசு மஹரிஷி சமாதி ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும்.

10.00 மணி தொடக்கம் குரு பூஜை, காயத்ரி பூஜை, மற்றும் விஷேட மூலிகைகளைக் கொண்டு மஹாமிருத்யுஞ்ஜய ஹோம் என்பன நடைபெறும் (பக்தர்கள் தங்கள் கரங்களினால் ஆகுதி கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.)

இரவு 12.00 மணி முதல் 02.00 மணிவரை மூன்றாம் ஜாமம் பூஜைகள் இலிங்கோத்பவ காலத்தில் விஷேட அபிஷேகமும், வில்வாஸ்டோத்ரமும் இடம்பெறும். 2.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை அருளுபதேசம், பஜனை, சிவபஞ்சாட்சர மந்திர பாராயணம், பிரார்த்தனை, தியானம் என்பனவும் இடம்பெறவுள்ளது.

பின்னிரவு 04.00 மணிக்கு நான்காம் ஜாம விஷேட அபிஷேகமும் பூஜையும் இடம்பெற்று,ஆசிர்வாதத்துடன் பூஜைகள் யாவும் இனிதே நிறைவுபெறும்.

மேற்படி பூஜை நிகழ்வுகளில் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருடனும் கலந்து கொண்டு சற்குருமூர்த்திகளினதும், ஸ்ரீ இலங்காதீஸ்வரப் பெருமானினதும் , அன்னை காயத்ரி தேவியினதும் பரிபூரண அருட்கடாட்சத்தை பெற்றேகுமாறு ஸ்ரீ இலங்காதீஸ்வர ஆலய ஸ்ரீ காயத்ரி பீட அறங்காவலர் சபை கேட்டுக்கொண்டுள்ளது. 

சக்திவேல் சந்திரமோகன் 
நிர்வாக அறங்காவலர்
ஸ்ரீ காயத்ரி பீடம்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -