எஸ்.எம்.சன்சீர்-
டெல்லியில் 'வாட்ஸ் அப்' மூலம் படங்கள் குறுந்தகவல்கள் அனுப்புவதுடன் எதிர் தரப்பில் உள்ளவருடன் பேசவும் வசதி வந்துவிட்டது. தற்போது இந்தியாவில் குறிப்பிட்ட சிலரிடம் சோதனை அடிப்படையில் 'வாட்ஸ் அப்'பில் பேசும் வசதியை நிறுவனம் வழங்கியுள்ளது. இதுகுறித்து 'வாட்ஸ் அப்' நிறுவனம் சார்பிலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனாலும் நேற்று முதல் ஸ்மார்ட் போன் வைத்துள்ளவர்கள் பலருக்கும் 'வாட்ஸ் அப்'பில் பேசிக் கொள்ள வசதி கிடைத்துள்ளது.
ஆண்ட்ராய்டு பிளாட்பாரத்தில் (ஆணை தொகுப்பில்) இயங்கும் 'வாட்ஸ் அப்' செயலி வைத்துள்ள அனைவரும் அதன் மூலம் நண்பர்களிடம் பேச முடியாது. இதற்காக 'வாட்ஸ் அப்' வலைதளத்தில் நுழைந்து மேம்படுத்தப்பட்ட .யிம என்ற ஃபைலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்படியே அதை பதிவிறக்கம் செய்தாலும் பிறருடன் பேசுவதற்காக இணைய முடியாது. எதிர் தரப்பில் பேசுபவரிடமும் அந்த பைல் இருந்தால் மட்டுமே பேசலாம். அவ்வாறின்றி நண்பருக்கு அந்த பைலை அனுப்பி அதன் மூலமாகவும் பேசலாம். வாட்ஸ்அப்பை பேஸ்புக் நிறுவனம் கையகப்படுத்தியது முதல் இதுபோன்ற அதிரடி மாற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
.jpg)