எஸ்.எம். சன்சீர்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் முனாஸ் அவர்களின் அழைப்பின் பெயரில் நேற்று (2015.02.01) பிற் பகல் 3.00 மணியளவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமமைச்சருமான றிசாத் பதியுதீன், பிரதி அமைச்சர் எஸ்.எம்.அமீர் அலி ஓட்டமாவடி நகர முதல்வர் வை.எல்.எஸ். ஹமீட் ஆகியோர் வருகைதந்தனர்.
இதன் போது இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு சென்று பள்ளிவாயல் தலைவர் உட்பட நம்பிக்கயாளர்களுடனும் மற்றும் அங்கு குளுமியிருந்த பொது மக்களுடனும் உரையாடி, பள்ளியின் நிர்மானப்பணிக்கு உதவி செய்வதாக கூறி அங்கிருந்து புறப்பட்டார்.
மேலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் முனாஸ் அவர்களின் இல்லத்தின் முன்றலில் பொது மக்களை சந்தித்து உரையாடி அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை எதிர்காலத்தில் தீர்வு காண்பதாகவும் இப்பிரதேசத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வளர்ச்சிக்கு பாடுபடுமாறும் வேண்டிக் கொண்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)